கடந்த ஒரு மாதத்தில் 2540 பேர் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, July 13, 2019

கடந்த ஒரு மாதத்தில் 2540 பேர் கைது!கடந்த 05 ஆம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்திய 2540 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விஷேட நடவடிக்கை கடந்த 05 ஆம் திகதி ஆரம்பமாகியது.

நேற்று காலை 06.00 மணி முதல் இன்று காலை ஆறு மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 260 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யுத் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இன்று வரை 2540 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது