மதுபோதையில் வாகனம் செலுத்திய 1500 பேர் 4 நாட்களில் கைது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, July 10, 2019

மதுபோதையில் வாகனம் செலுத்திய 1500 பேர் 4 நாட்களில் கைது



இலங்கையில் கடந்த 4 நாட்கள் நடாத்தப்பட்ட வீதி சோதனைகளின்போது சுமாா் 1500 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்த்துறை ஊடக பேச்சாளா் காாியாலயம் கூறியுள்ளது. 

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கான சுற்றி வளைப்புகள் கடந்த 5 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தநிலையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக இதுவரை 1500 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.