நாட்டை நேசிக்கும் தலைவன் ஒருவனும் இல்லை! ராதாகிருஷ்ணன்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 11, 2019

நாட்டை நேசிக்கும் தலைவன் ஒருவனும் இல்லை! ராதாகிருஷ்ணன்!

இலங்கை நாட்டை நேசிக்கும் அளவுக்கு தலைவர்கள் ஒருவரும் இல்லை என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஜக்கிய தேசிய கட்சிக்கு அந்த கட்சியை நேசிக்கும் தலைவர் இருக்கின்றார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அதனை முன்னேற்றுவதற்கு ஒரு தலைவர் இருக்கின்றார். அதே போல ஏனைய எல்லா கட்சிகளுக்கும் அந்த கட்சியை நேசிக்கின்ற தலைவர்கள் இருக்கின்றார்கள்.

ஆனால் இந்த நாட்டை நேசிக்கின்ற இந்த நாட்டைப்பற்றி சிந்திக்கின்ற ஒரு தலைவன் இல்லை. எனவே அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இந்த நாட்டை நேசிக்கின்ற இந்த நாட்டைப்பற்றி சிந்திக்கின்ற ஒரு தலைவன் தெரிவு செய்யப்பட வேண்டும். அதற்காக மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.