நுவரேலியா மாவட்டத்திலுள்ள தலவாக்கலை நகரசபை அனுமதியில்லாமல் மருத்துவமனை நடத்திய வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் சாய்ந்தமருதை சேர்ந்த முஸ்லிம் வைத்தியர் ஆவார். கடந்த ஒரு வருடமாக அங்கு சிகிச்சை நிலையம் நடத்தி வந்துள்ளார்.
மலையக தமிழ் மக்கள் செறிந்து வாழும் லிந்துல பகுதியில் சுமார் இரண்டு வருடகாலமாக தனியார் மருத்துவமனை ஒன்றினை நடாத்தி வந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை சாய்ந்தமருது சேர்ந்த வைத்தியர் ஒருவர் தலவாக்கலை பொலிஸாரினால் நேற்று கைது செய்யபட்டுள்ளார்,
குறித்த மருத்துவமனையின் வைத்தியர் எம்.பி.பிஎஸ்.என்ற தகமையை கொண்ட வைத்தியர் என தம்மை அடையாளபடுத்தி கொண்டு பல தமிழ் பெண்களுக்கு கருக்கலைப்பில்
ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இந்த விடயத்தினை குறித்த மருத்துவமனையில் தொழில் புரிந்து வந்த தாதியரினால் தலவாகலை லிந்துளை நகரசபையின் தலைவர்
அசோக்கபாலவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த வைத்தியசாலைக்கு சென்ற தலவாகலை லிந்தளை நகரசபையின் தலைவர் மற்றும் பொலிஸார் வைத்தியசாலைக்கு சென்று சோதனையிட்டபோது குறித்த வைத்தியர் மருத்துவத்துறை பட்டதாரி தகைமையுடையவர் அல்ல என்பது பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் தெரியவந்தது.
அவரிடம் இருந்து சான்றுதல் அனைத்தும் போலியாக தயாரிக்கபட்டது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை இந்த மருத்துவமனையில் இருந்து பெருந்தொகையான கருக்கலைப்பு மாத்திரைகளும் உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளார்கள்.
கைது செய்யபட்ட போலி வைத்தியரை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம்
தொடர்பில் மேலதிக விசாரனைகளை தலவாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.