பிரான்ஸில் மிகச் சிறந்த தாடி அழகன் பட்டத்தை வென்ற தமிழன்! யார் தெரியுமா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, June 28, 2019

பிரான்ஸில் மிகச் சிறந்த தாடி அழகன் பட்டத்தை வென்ற தமிழன்! யார் தெரியுமா?


பிரான்ஸ் தலைநகர் பரிஸில், தாடி வைத்திருப்போருக்கான பிரத்யேக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

குறித்த போட்டியில் மிகச்சிறந்த தாடி அழகன் பட்டத்தை ஈழத்தமிழர் ஒருவர் பெற்றுள்ளார். மேலும் இவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம்யுள்ளது.

ஆண்கள் என்றவுடனே, பளிச்சென்று வெளிப்படுவது அவர்களது தாடியும், மீசையும் தான். அவ்வாறு ஆசையுடன் தாடியும், மீசையும் நீளமாக வளர்ப்போருக்கான சாம்பியன்ஷிப் போட்டி இந்த ஆண்டு பரிஸில் நடைபெற்றது.

15 பிரிவுகளாக நடந்த இந்த போட்டியில், 86 போட்டியாளர்கள் பங்கேற்று, விதவிதமான மீசை அலங்காரத்துடன் தோன்றினர்.

இதில் டெடி போனட் என்பவர், தனது மீசைக்குள் 2 பேஸ்பால்களை அடக்கி வைத்திருந்த காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இப்போட்டியில் கலந்து கொண்ட, ஈழத்தமிழரான, திரு மகேஸ்வரதாஸ் பிரதாஸ் அவர்கள் முதல் சுற்றில் 86 தாடியழகர்களுடன் போட்டியிட்டு, பின்னர் 8 தாடியழகர்களுக்கு மத்தியில் 24 cm கொண்ட சிறந்த தாடி அழகனாக தெரிவு செய்யபட்ட ஓர் ஈழத்தமிழ் மகனாவார்.

கடந்த 4 வருடங்களாக தாடி வளர்க்கும் 30 வயதை கொண்ட பிரதாஸ் தனது திருமணத்தின் பொழுதும் தாடியோடு தான் துணைவியின் கரம் பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதே நேரத்தில் இந்த போட்டிக்கு இவருடைய வேலை நிறுவனத்திற்கு வந்து செல்லும் இத் துறைசார்ந்த ஓர் பத்திரிகை நிருபரே கட்டாயப்படுத்தி இவரை அழைத்துச் சென்றார்- என்பதோடு 6000€ கள் ரொக்கப் பணப் பரிசினை பெற்றுக் கொண்டார் என்பதும் மேலதிக தகவல்களாகும்