தஜிகிஸ்தான் நாட்டில் துஷன்பே மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கும் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீது அமெரிக்காவினால் வர்த்தகத் தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், எதிர்காலத்தில் அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடியதாக சனாதிபதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.