யாழிலிருந்து வவுனியா சென்ற வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, June 8, 2019

யாழிலிருந்து வவுனியா சென்ற வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது!

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச திணைக்களம் ஒன்றுக்கு சொந்தமான வாகனம் கனகராயன் குளம் பகுதியில் திடீரென தீப்பிடித்து எாிந்துள்ளது.

குறித்த சொகுசு வாகனம் இயந்திர கோளாறு காரணமாக தீப்பிடித்தது எனத் தெரிவிக்கப்படுகிறது. அரச திணைக்களம் ஒன்றுக்குச் சொந்தமான வாகனமே தீப்பிடித்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது வாகனத்தில் பயணித்தவர்கள் வாகனத்திலிருந்து குதித்து தப்பி ஓடி உயிர் பிழைத்துக்கொண்டனர்.