ரஷ்யாவின் யாகுடா என்ற பகுதியில் ஆர்ட்டிக் பனி பிரதேசத்தினை அருகாமையில் திர்குட்யாக் ஆற்றின் கரையிலிருந்து பனி ஓநாயின் தலை ஒன்றினை கண்டெடுத்துள்ளனர். ஓநாயின் தலை விசித்திரமாக இருந்ததால் ஆராய்சி மையத்திற்கு அப்பகுதி மக்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
ஜப்பான் மற்றும் சுவிடன் நாட்டின் ஆராச்சியாளர்கள் ஓநாயின் தலையின் மாதிரிகளை ஆராய்ந்ததில் அது சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பனி ஒநாயின் தலை என கண்டுபிடித்துள்ளனர். மேலும் பனியில் இருந்ததால் அதன் தலை பகுதி அழுகாமல் உறைந்து உள்ளதாக ஆராச்சியாளர்கள் கூறியுள்ளானர்