முல்லைத்தீவு- மாங்குளம், முறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்திலுள்ள கடையொன்றின் உரிமையாளர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மாங்குளம் பொலிஸாருக்கு, அப்பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமையவே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆண் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் சம்பவத்தில் உயிரிழந்த ஆணின் சடலத்தை நீதவான் இன்னும் வருகை தந்து பார்வையிடாதமையால் அவ்விடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.