அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் உடல் நிலை மோசமடைந்துள்ளதால் முதலுதவி சிகிச்சையை தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத் தலைவர் சிவசிறி க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அளகக்கோன் விஜயரெட்னம், சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
இவர்களுடன் சமூக அமைப்புக்கள், கல்முனை வாழ் தமிழ் இளைஞர்களும் இணைந்து போராட்டத்தில் இணைந்துள்ளனர்.