நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 23, 2019

நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி!நீராட சென்றிருந்தபோது கடலில் மூழ்கிய 4 பேரும் உயிாிழந்துள்ளதாக தொியவருகின்றது.

கிரிந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்ஸமாராம கிரிந்த கடலில் நீராடசென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் பலியாகியுள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவித்தனர். தாயார் உயிருக்காக போராடி ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நீராட சென்றிருந்தபோது கடலில் மூழ்கிய 4 பேரும் உயிாிழந்துள்ளதாக தொியவருகின்றது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் ஹட்டன் பகுதியை சேர்நதவர்கள் எனவும் உயிரிழந்த பெண்மணி நுவரெலியா சம்பத் வங்கியில் பணிபுரிந்து
வருவதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை நுவரெலியா சம்பத் வங்கியில் பணிபுரியும்குழுவினரோடு யால பகுதிக்கு இவர்கள் சுற்றுலா சென்றதாக உறவினர்கள்தெரிவிக்கின்றனர்.

இவ் மரண சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிரிந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.