சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்துகம - தெல்கஹாவத்த பகுதி வீடொன்றில் இன்று அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
44 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான மத்துகம - உடவெல சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
இந்நிலையில் உயிரிழந்த நபருக்கும், அவரது மாமாவின் மகனான சந்தேக நபருக்கும் இடையில் காணப்பட்ட காணிப்பிரச்சினையின் காரணமாகவே இந்த கொலை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை உயிரிழந்தவரின் வீட்டிலிருந்து கைகுண்டொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் கொலை தொடர்பான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.