நடிகர் ஜெயராம் வீடு தாக்குதல் நடத்தியதன் குற்றவாளிகளாக இருந்துவந்த நாம்தமிழர் கட்சி சீமான் மற்றும் பெரியார் திராவிடர் கழகத் தமிழுணரவாளர் டேவிட் பெரியார் உட்பட 12 பேருக்கு வழக்கிலிருந்து விடுதலை கிடைத்துள்ளது.
நடிகர் ஜெயராம் கடந்த 2010-ஆம் ஆண்டு மலையாள தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் , வீட்டில் வேலைசெய்யும் பெண்கள் குறித்து “ கழுத்து தடித்த எருமைகள் என்று கசர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.
அப்போது, இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதைத் தொடர்ந்து, 2010 பிப்ரவரி 5-ஆம் தேதி வளசரவாக்கம் ஜானகி நகரில் உள்ள நடிகர் ஜெயராமின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுகுறித்து அவரது உதவியாளர் மைக்கேல்ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் காவல்துறையினர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 14 பேர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு குறித்த விசாரணை திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நடந்தபோதே சீமான், டேவிட் பெரியார் உட்பட 12 பேருக்கு வழக்கிலிருந்து விடுதலை கிடைத்துள்ளது.