சஹ்ரானின் மடிக்கணனியில் இருந்த தகவல்களால் மிரண்டுபோன இந்திய புலனாய்வு அதிகாரிகள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 4, 2019

சஹ்ரானின் மடிக்கணனியில் இருந்த தகவல்களால் மிரண்டுபோன இந்திய புலனாய்வு அதிகாரிகள்!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சஹரான் ஹாஷிமின் மடிக் கணினி ஒன்றை அண்மையில் பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியிருந்தனர்.

அதற்கு முன்னதாக இலங்கை புலனாய்வு துறைக்கு ஆதரவாக விசாரணை ஆய்வுகளில் இந்தியாவின் தேசியப் புலனாய்வு முகவர் அமைப்பு, இந்த மடி கணணிகளை ஆராய்ந்த போது அவர்களுக்கு பேரதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மடிக் கணினியில் உள் சென்று ஆராய்ந்த போது, பல்வேறு காணொளி பதிவுகள் மற்றும் தொடர்பாடல் உரையாடல் இருப்பதாக கூறப்படுகிறது.

அதில் ஓரிடத்தில், ‘எனது தியாகம் இந்தியாவிலும் ஐஎஸ் இயக்கத்தை வளர்க்க உதவும்’என்றும் கூறப்பட்டுள்ளது. இது இந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஏற்கனவே குண்டு வெடிப்பின் பின் சஹரானின் கூட்டாளிகள் என்றும் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் , இந்தியாவின் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த காணொளி அதை உறுதிப்படுத்துவது போல இருப்பதாக பாதுகாப்பு தரப்பு கூறியுள்ளனர்.

இதேவேளை இந்தியாவில் இரண்டாம் முறையாகவும் பிரதமராக மோடி பதவியேற்ற நிலையில் அவர் விரைவில் இலங்கை வருவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் , வெளிவரும் இந்த தகவல்களால் அவரது பயணம் தள்ளிப்போகலாம் எனவும் கூறப்படுகின்றது.