இன்று 12மணிக்குள் தீர்வுகள் எட்டப்படா விட்டால் அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, June 20, 2019

இன்று 12மணிக்குள் தீர்வுகள் எட்டப்படா விட்டால் அடுத்து என்ன நடக்கும் தெரியுமா?

அடிப்படைவாதிகள் தமிழர்களின் உரிமையை வழங்க மறுக்கின்றனர் என மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்


இந்நிலையில் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு நேற்றைய தினம் சென்ற அவர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் கல்முனை தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நியாயமான கோரிக்கைக்காக உண்ணாவிரதமிருக்கும் எமது மதகுருமார், இளைஞர்கள் நீதியின் பக்கம் நிற்கின்றனர். போராட்டம் நேர்மையானது.

அடிப்படைவாதிகள் தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்காதிருப்பதை எண்ணி நான் மிகவும் துக்ககரமாக இருக்கின்றேன்’ என குறிப்பிட்டுள்ளார்.