தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை இந்திய அரசு 5 ஆண்டுகளுக்கு நீடித்துள்ள நிலையில், தமிழீழ விடுதலையை பா.ஜ.க அரசால் தடுத்திட முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இந்த செயல் மூலம் பாரதீய ஜனதாக் கட்சி மனித விடுதலைக்கு எதிரான கட்சி என்பதை நிரூபித்துள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், இந்தியாவின் இறையான்மை மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு எதிராக விடுதலைப்புலிகள் செயற்படுவதாகவும், தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவைப் பெருக்கும் முயற்சியில் சிலர் தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும், இந்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.