கடந்த உயிர்த்த ஞாயிறு ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகளின் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி நிகழ்வு இன்று மாலை திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாதம் பூர்த்தியாகியுள்ள நிலையில், குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நாடளாவிய ரீதியாக பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
அந்தவகையில் திருகோணமலை கடற்கரையில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல் மற்றும் மதத்தலைவர்கள் பொதுமக்கள் எனப்பலர் பங்கேற்றனர்.
இதன் போது சிறப்புப் பிரார்த்தனையும் அதனைத் தொடர்ந்து நினைவுச்சுடரும் ஏற்றிவைக்கப்பட்டது.