கிளிநொச்சியில் மோப்ப நாயுடன் பாடசாலைகளில் சோதனை!! - மோட்டார் சைக்கிளால் பரபரப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, May 6, 2019

கிளிநொச்சியில் மோப்ப நாயுடன் பாடசாலைகளில் சோதனை!! - மோட்டார் சைக்கிளால் பரபரப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை தவிர ஏனைய பாடசாலைகள் இரண்டாம் தவணைக் கல்விச் செயற்பாடுகளுக்காக இன்று ஆரம்பிக்கப்பட்டன.

மாணவர்கள் பாடசாலைகளின் நுழைவாயிலில் வைத்து கடும் சோதனைகளுக்கு பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மாணவர்களின் புத்தக பைகள் சோதனையிடப்பட்டன. சோதனைக்கு மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.


இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிளால் பரபரப்பு!!

கிளிநொச்சி முறிகண்டி பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிள் நீண்ட நேரம் தரித்து விடப்பட்டிருந்ததால், குழப்பமடைந்த மக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.

அங்கு விரைந்த பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிளைச் சோதனைக்குட்படுத்தினர்.நீண்ட நேரத்தின் பின்னர் குறித்த மோட்டார் சைக்கிளை உரிமை கோரி அப்பகுதிக்கு வந்த நபர், நீதிமன்றத்துக்குச் செல்வதற்காக மோட்டர் சைக்கிளை அங்கு தரித்து விட்டுச் சென்றதாக பொலிஸாருக்குத் தெரிவித்தார்.

குறித்த நபர் மாங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் கிளிநாச்சி அக்கராயன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், மோட்டார் சைக்கிளை 5 நாள்களுக்கு முன்னர் லீசிங் மூலம் பெற்றுள்ளார்.இதுவரை மோட்டர் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யவில்லை என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.