குருணாகல் பிரதேசத்தில் முஸ்லிம்களின் உடமைகள், கடைகள் சிங்கள இளைஞர்களால் சூறையாடப்பட்டுக்கொண்டிருப்பதான காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கத் தவறினால் நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்கும் என்று சிறிலங்காவின் சிங்கள பௌத்த தலைமை பீடங்களில் ஒன்றான மல்வத்து பீடம் எச்சரிக்கை விடுத்து 24 மணி நேரத்திற்குள் இந்த வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.