புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளியை தப்பிக்க உதவினார் என்று, மூத்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு எதிராகவே சட்டமா அதிபரின் சார்பில் நேற்று யாழ். மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளியான சுவிஸ் குமார் எனப்படும், மகாலிங்கம் சசிகுமாருக்கு உதவினார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக குற்றவியல் சட்டக்கோவையின் 209 ஆவது பிரிவின் கீழ், குற்றவாளிக்கு உதவியாக இருந்தார், புகலிடம் அளித்தார் என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது