முள்ளிவாய்காலில் தமிழீழ விடுதலை புலிகளின் சீருடை, குப்பி, தகட்டுடன் எலும்பு எச்சங்கள் மீட்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, May 17, 2019

முள்ளிவாய்காலில் தமிழீழ விடுதலை புலிகளின் சீருடை, குப்பி, தகட்டுடன் எலும்பு எச்சங்கள் மீட்புமுள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மலசல கூடத்திற்கு குழி வெட்டும்போது தமிழீழ விடுதலை புலிகளின் பெண் போராளி ஒருவருடையது என நம்பப்படும் எலும்பு எச்சங்கள் விடுதலை புலிகளின் சீருடையுடன் மீட்கப்பட்டிருக்கின்றது.

மீட்கப்பட்ட எலும்பு எச்சங்களுக்கு அருகில் குப்பி, தகடு மற்றும் கைக்குண்டு உள்ளிட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், நாளை நீதிபதி சம்பவ இடத்திற்கு வந்து ஆராயவுள்ளாா்.