ரிஷாத்தின் பல கோடி சொத்துக்களை பதுக்கி வைத்திருக்கும் அவர்.. இவரா? சிக்கியது அடுத்த இரகசியம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, May 27, 2019

ரிஷாத்தின் பல கோடி சொத்துக்களை பதுக்கி வைத்திருக்கும் அவர்.. இவரா? சிக்கியது அடுத்த இரகசியம்


கைது செய்யப்பட்டுள்ள குருணாகல் வைத்தியரிடம் இருக்கும் சொத்துக்கள், அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் மூலம் பெறப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிப்பத்தாக தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் மொஹம்ட் முசம்மில் அவர்கள் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களை சந்தித்த போதே மொஹமட் முசம்மில் அவர்கள் தெரிவித்தார்கள்.

அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் கட்சியின் பிரபலமான சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் ஷாபி ஐக்கிய தேசிய கட்சியில் 2015 பாராளுமன்ற தேர்தலின் போது தோல்வியுற்றதும் மீண்டும் குருணாகல் வைத்தியசாலையில் பணி புரிய தேவையான ஆவணங்களை பதியுத்தீன் அமைச்சரே ஏற்பாடு செய்ததாகவும் முசம்மில் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் மற்றும் வைத்தியரிடையில் நெருங்கிய உரவின் காரணமாக ரிஷாத் பதியுத்தீனுக்கு சொந்தமான சொத்துக்கள் வைத்தியர் ஷாபியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கலாம் என முசம்மில் சந்தேகிக்கின்றதாக தெரிவித்தார்.