ஞானசாரதேரர் உள்ளேயா?வெளியேயா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 22, 2019

ஞானசாரதேரர் உள்ளேயா?வெளியேயா?

பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் மைத்திரியின் உத்தரவில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இன்னும் அவர் விடுதலை  செய்யப்படவில்லை. அவர் தற்போது சிறைச்சாலைக்குள்ளேயே இருக்கிறாரென சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துசார உபுல் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதியிடமிருந்து, ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கான எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்புக்களும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இன குரோதம் தொடக்கம் இன வன்முறை என அத்துணை அசிங்கங்களையும் செய்து நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட ஞானசார தேரரை சிறை சென்று சந்தித்து ஜனாதிபதி விடுவித்து இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் சந்திரிகா கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டவர்களுக்கு உதவியதாக ரகுபதி சர்மா என்கிற சைவ மத குருவிற்கு 300 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது .இந்த வழக்கில் பயங்கரவாத சட்டத்தின் கீழ் பலவந்த படுத்தி குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு இருந்தது .நீதிமன்றத்தில் இது தொடர்பாக குறித்த மத குரு சொன்ன போதும் அவர் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள படவில்லை.இலங்கையின் நீதி துறை மற்றும் நிறைவேற்று அதிகாரம் சிறுபான்மை சமூகங்களை ஓரவஞ்சனையாக நடத்துவதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு இதுவென அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் ஞானசார தேரர் மைத்திரியின் உத்தரவில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இன்னும் அவர் விடுதலை  செய்யப்படவில்லை. அவர் தற்போது சிறைச்சாலைக்குள்ளேயே இருக்கிறாரென சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துசார உபுல் தெரிவித்துள்ளார்.