கடந்த நான்கு வருடங்களில் இந்த அரசாங்கம் அமெரிக்காவுடன் இரண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளன.
இந்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்க அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
இன்னுமொன்றில் கைச்சாத்திட தயாராகியுள்ளார்கள்.
இந்த மூன்று உடன்படிக்கைகளையும் சரியாக அவதானித்தால் ஏனைய விடயங்கள் தெளிவாகும்.
ஒன்று ஏசிஎஸ்ஏ எனும் உடன்படிக்கை. கைப்பற்றல் மற்றும் இடைநிலை சேவை வழங்குவது தொடர்பானது.
ஐக்கிய அமெரிக்காவின் கடற்படை உள்ளிட்ட பல படைகள் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன.
அவசர நிலைமையின் போது அதில் எந்தவொரு படையினாலும் இலங்கைக்குள் பிரவேசிக்க இனக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைச்சாத்திடப்பட்டுள்ள மற்றைய உடன்படிக்கை என்ன? அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்துடன் தொடர்புடைய மற்றும் தரகர்களாக கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் அனைவராலும் இராஜதந்திர சிறப்புரிமைகளுடன் சோதனைக்கு இலக்காகாமல் வந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவசர நிலைமையின் போது அமெரிக்க படையினர் வருவதற்கா அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவசர நிலை இயல்பாக ஏற்படாது. அதனை ஏற்படுத்த வேண்டும்.
அவசர நிலையை ஏற்படுத்த அனைவராலும் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்த முடியாது. அவ்வாறு நடத்த கூறினால் அதனை செய்வதற்கு அனைவரும் பைத்தியக்காரர்கள் அல்ல.
அதனை கடும்போக்கு வாதிகளால் மாத்திமே செய்ய முடியும். அந்த கத்தோலிக்க மீனவர்களின் கத்திகள் உயர்ந்திருந்தால் இரத்த களரி எங்கே முடிவடைந்து இருக்கும்.
இதன்மூலம் அவசரகால நிலை மிகவும் அபாயகரமான முறையில் உடனடியாக ஏற்பட்டதா? இலங்கையிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் அதில் தலையிடுமாறும் பாப்பரசர் உலக தலைவர்களிடம் கோர மாட்டாரா? அவ்வாறு இடம்பெற்றால் அந்த உடன்படிக்கைக்கு அமைய அழைப்பு விடுக்கப்படாமலேயே அமெரிக்காவின் ஏழாவது இந்து பசுபிக் கடற்படை இங்கு வருகை தராதிருக்குமா?
அந்த அபாய நிலை இன்றும் உள்ளது. இது நாட்டு மக்கள் இதுவரையில் அமைதியாக செயற்பட்டதை போன்று தொடர்ந்தும் செயற்படாமல் மாறுபட்ட விதத்தில் செயற்பட முயற்சித்தால் அமெரிக்கா எதிர்பார்த்து காத்திருக்கும் அவசர நிலை உருவாகும்.
சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை உருவாக்கியது. சோவியத் யூனியனுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் தலிபான்களை உருவாக்கியது.
வேறு யாரும் அல்ல. ஐக்கிய அமெரிக்காவின் சிஐஏ. அவர்கள் உலகின் ஏதேனும் நாட்டை முடக்குவதற்கு தீர்மானித்தால் அங்கு தான் ஐ.எஸ்.ஐ.எஸ் இருக்கும்.
இதனை நாம் வெளிப்படையாக எதிர்கொள்ள வேண்டும். தற்போதுள்ள அமெரிக்க தூதுவர் இதற்கு முன்னர் டியூனிசியாவில் இருந்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்தார். சரியாவில் இருந்தார். அந்த அனைத்து இடங்களிலும் வெடித்தது. அந்த அனுபவமுள்ள தூதுவர் தற்போது கொழும்பில் இருப்பதை குறைத்து மதிப்பிட வேண்டாம்.
சங்கரீலா ஹோட்டலில் இரண்டு குண்டுகள் வெடித்தது வெறுமனே அல்ல. சில ஹோட்டல்களுக்குள் தற்கொலை குண்டுதாரி சென்று வெளியில் வருவதும் வெறும் சம்பவம் அல்ல.
தாக்குதல் நடத்த முடியாமல் போன ஹோட்டலின் உரிமையாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று பார்த்தால் அதுவும் புரியும்.
சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான அதிகார போட்டியின் போர்க்களமே இது. உலக அரசியல் அதிகாரப் போட்டியின் இரையாக இலங்கை இன்று மாறியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.