இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் திகதி முதல் 19-ஆம் திகதி வரை 17-வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
நாடு முழுவதும் வாக்குப்பதிவு நடந்த 542 மக்களவை தொகுதிக்கும் மொத்தமாகச் சேர்த்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை இங்கு மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.
அதனுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
மக்களவை தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து தமிழக இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறவுள்ளது.
காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. 8:30 மணி முதல் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் 45 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை பல சுற்றுகளாக நடைபெறவுள்ளது.
தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் பணிகளில் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், மற்றும் நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 306 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே அதிகாரிகள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வரத் தொடங்கிவிட்டனர்.
ஒவ்வொரு வேட்பாளருக்கும் 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கூர்மையாக உள்ள பேனா, கத்தி போன்றவை வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாது.
முகவர்களுக்குத் தேவையான அனைத்தும் மையத்திலிருந்து 100 மீற்றர் சுற்றளவில் தான் கிடைக்கும். வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதங்கள் நடக்காததைத் தடுத்த தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக 3 இடங்களிலும், திமுக 1 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகிறது.
இதுவரை வெளியான முடிவுகளுக்கு அமைய பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது. இதுவரை 300 இற்கும் முற்பட்ட ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி இதுவரை 80 ஆசனங்களை பெற்றுள்ளது.