முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியது ஏன்? கருணா விளக்கம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, May 25, 2019

முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியது ஏன்? கருணா விளக்கம்

விடுதலைப் புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கான காரணத்தை முன்னாள் பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக கருணா குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் மக்களையோ அவர்களின் தலைவர்களையோ தண்டிப்பதை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை.

கடைசி வரையில் அந்தக் கொள்கையில் பிரபாகரன் உறுதியாக இருந்தார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை இலக்கு வைத்து ஒருநாளும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியது இல்லை.

எனினும் அண்மைக்காலமாக மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. அதுவும் படித்தவர்கள், கோடிஷ்வரர்களால் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட போவதாக ஏப்ரல் 11இல் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் கருணா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது இந்த விடயங்களை அவர் வெளியிட்டார்.