முஸ்லிம் ஆசிரியைகளால் கண்டி தூய அந்தோனியார் மகளிர் பாடசாலையில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு செல்வதை அரசாங்கம் தடை செய்துள்ளது. எனினும் அதனை நிராகரிக்கும் 6 முஸ்லிம் ஆசிரியர்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாடசாலையின் இரண்டாம் தவணை ஆரம்பித்து இதுவரை அதன் கல்வி நடவடிக்கைகள் உரிய முறையில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாட்டினுள் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு குறித்த பாடசாலை நிர்வாகம் மற்றும் பெற்றோர் உட்பட தரப்பினர் பல்வேறு சட்டத்திட்டங்களுடன் பாடசாலையை ஆரம்பித்துள்ளனர்.
எப்படியிருப்பினும் அங்கு கற்கை நடவடிக்கையில் ஈடுபடும் 12 முஸ்லிம் ஆசிரிகைகளில் 6 பேர் மாத்திரம் முகத்தை மூடும் நிகாப் அணியாமல் பாடசாலை செல்வதனை நிராகரித்துள்ளனர்.
சட்ட திட்டங்களுக்கு அமைய பாடசாலைக்கு வந்து கல்வி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்குமாறு பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முகத்தை மூடி பாடசாலைக்கு வருவதை தவிர்ததுக் கொள்ளுமாறு சில நாட்களுக்கு முன்னர் கல்வியமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.