அமைச்சர் ரிசாத் பதியுதீன், பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் 6 மணிநேரம் வாக்குமூலம் வழங்கினார்.
இன்று முற்பகல் 10 மணி முதல் மாலை 4 மணிவரை அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் மாலை 4.30 அளவில் அவர் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிலிருந்து வெளியேறினார்.
2014 மற்றும் 15 ஆம் ஆண்டுகளில் லக் சதொச நிறுவனத்திற்கு 2 லட்சத்து 57 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணைக்கே அமைச்சர் ரிசாத் பதியுதீன் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.