கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் ஒருகொடவத்தை மேம்பாலத்துக்கு அருகில் இரண்டு கிலோவுக்கும் அதிக தொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை மாவட்ட மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகபுத்கமுவ, அங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய மொஹமட் ரஹீம் மொஹமட் ரொஷான் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரேண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.