யாழ்ப்பாண போதைப்பொருள் வர்த்தகத்தில் காவற்துறைக்கு சம்மந்தமா? வெளியான அதிரடி தகவல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 13, 2019

யாழ்ப்பாண போதைப்பொருள் வர்த்தகத்தில் காவற்துறைக்கு சம்மந்தமா? வெளியான அதிரடி தகவல்

யாழ்ப்பாணத்தின் மாதகல் பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்தில் கடற்படை மற்றும் இலங்கை காவல்துறை பங்காளிகளாக உள்ளனராவென்ற சந்தேகம் வலுத்துள்ளது.

அண்மையில் போதைபொருள் கும்பலொன்றை சேர்ந்த கஞ்சா போதைப்பொருள் வியாபாரி ஒருவரை காவல்துறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கைது செய்திருந்தது.இதனை அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்ற போதிலும், தம்மால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை என காவல்துறை தரப்பு அடியோடு மறுத்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (11) மாலை இடம்பெற்றுள்ளது.

மாதகல் பகுதியில் கஞ்சா போதைப்பொருள் வியாபாரியை காவல்துறை கைது செய்ய முயன்ற போது, சந்தேகநபர் அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்டார் எனவும், அதன் போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு சந்தேக நபரை மடக்கி பிடித்து கைது செய்ததாக அப்பகுதியை சேர்ந்தோர் தெரிவித்தனர்.

அது தொடர்பில் காவல்துறை தரப்பை வினவிய போது, இளவாலை காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட சித்தங்கேணி பகுதியில் வைத்து 7.2 கிலோ கிராம் கஞ்சா போதை பொருளுடன் ஒருவரை கைது செய்தததாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மாதகலில் கைது செய்யப்பட்டவரெங்கேயென்ற கேள்வி எழுந்துள்ளது.திட்டமிட்ட வகையில் அதனை மறைப்பதால் போதைப்பொருள் வர்த்தகத்தில் கடற்படை மற்றும் இலங்கை காவல்துறை பங்காளிகளாக உள்ளனராவென்ற சந்தேகம் வலுத்துள்ளது.