தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் மகேந்திரன் உயிரிழப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 1, 2019

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் மகேந்திரன் உயிரிழப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

உடல் நலக்குறைவால் உயிரிழந்த மகேந்திரனின் வயது 79.

இயக்குநர் மகேந்திரனுக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. வயது முதிர்வு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை.

கடந்த மாதம் 27 ஆம் திகதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் உயிரிழந்த செய்தியை அவரது மகன் ஜான்மகேந்திரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தற்போது கரு.பழனியப்பன் இயக்கிவரும் 'புகழேந்தி எனும் நான்' படத்தில், அருள்நிதியுடன் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும், ஜானி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மகேந்திரன். சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம், ரிஷிமூலம் உள்பட பல படங்களுக்கு கதை வசனம் எழுதி உள்ளார் இயக்குநர் மகேந்திரன்.

இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் சீனு ராமசாமி, தமிழ் சினிமாவின் இலக்கிய பூ உதிர்ந்து விட்டது. வரலாறு மறக்க முடியாத இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த தமிழ் படைப்பாளி என் முன்னோடி ஆசான் இயக்குனர் மகேந்திரன் அவர்கள். இதய அஞ்சலி சார்.

இயக்குநர் பார்த்திபன், முள்ளும் மலரும் மரணம்?

இன்னும் நூறு வருடமாவது

வாழும் மகேந்'திறன்'!!!