இலங்கையை அண்மித்த கடற்பகுதியில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் நேற்றிரவு 9.04 மணி அளவில் பதிவாகியுள்ளன.
இந்து சமுத்திரத்தின் மொஹென் பகுதியை அண்மித்து இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
5.3 மற்றும் 4.9 ரிக்டர் அளவுகளில் இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.