உலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் பயணம் தொடங்கியது: வெளியான வீடியோ - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 13, 2019

உலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் பயணம் தொடங்கியது: வெளியான வீடியோஉலகின் மிகப்பெரிய விமானமான ஸ்ட்ராடோலான்ச் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த பால் ஆலன் ஸ்ட்ராடோலான்ச் விமானத்தை உருவாக்கினார்.

இந்த விமானம் தனது முதல் பயணத்தின்போது சுமார் 15,000 அடிவரை, அதிகபட்சமாக மணிக்கு 274 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தது.


விமானத்தின் சிறப்புகள்
இருவேறு விமானங்களை ஒருங்கே கொண்டது போன்று ஆறு இன்ஜின்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விமானத்தை சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்திற்கு பறந்து கொண்டிருக்கையில் இதிலிருந்து விண்கலங்களை ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்திலுள்ள இரண்டு இறக்கைகளுக்கு இடையேயான தொலைவு மட்டும் 385 அடிகளாகும். இது ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தை விட சற்றே அதிகமாகும்.