சுவிட்சர்லாந்தில் வசிக்க கர்பத்தை கலைக்கச் சொன்ன கணவன்: நீதிமன்றத்தை நாடிய இளம்பெண் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 15, 2019

சுவிட்சர்லாந்தில் வசிக்க கர்பத்தை கலைக்கச் சொன்ன கணவன்: நீதிமன்றத்தை நாடிய இளம்பெண்

சுவிட்சர்லாந்தில் வசிக்க தமது மனைவியின் கர்பத்தை கலைக்க நிர்பந்திந்த கணவனை நீதிமன்றம் விசாரணைக்கு அழைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் பெற்றோருடன் குடியிருந்து வருபவர் 25 வயதான செர்பிய நாட்டு இளைஞர்.

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் அறிமுகமான செர்பிய இளம்பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் சுவிஸில் வைத்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மட்டுமின்றி, அதே ஆண்டு அக்டோபர் மாதம் செர்பியாவில் வைத்தும் ஆடம்பரமாக திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கர்ப்பமான குறித்த பெண்ணை, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பலமுறை கருவை கலைக்க நிர்பந்தித்து வந்துள்ளார்.

இதனிடையே, சில காரணங்களால் 2014 டிசம்பர் மாதம் செர்பியாவில் வைத்து குறித்த பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.

ஆனால் இச்சம்பவம் தொடர்பாக பின்னர் அவர் அளித்த புகாரில் போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதால் வழக்கு கைவிடப்பட்டது.

திருமணம் முடித்து செர்பியாவில் வசித்துவந்த இந்த தம்பதிகள் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்துக்கு திரும்பியுள்ளனர்.



ஜனவரி இறுதியில், தாம் மீண்டும் கருவுற்றிருப்பதை தெரிந்து கொண்ட அவர் தமது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பரிசோதனைக்காக மருத்துவர் ஒருவரை நாடிய தம்பதிகள், மருத்துவரின் ஆலோசனைப்படி கருவை கலைத்துவிடலாம் என அந்த கணவர் மீண்டும் நிர்பந்தித்துள்ளார்.



ஜேர்மன் மொழி பேசும் மருத்துவர் என்பதால், அவரும் கணவரும் பேசிக்கொள்வதை குறித்த இளம்பெண்ணால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இருப்பினும் கருவை கலைக்க அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதன் தொடர்ச்சியாக தம்பதிகள் இருவரையும் கணவரின் குடும்பத்தார் பிரித்துள்ளனர்.

மட்டுமின்றி, உத்தியோகப்பூர்வமாக விவாகரத்துக்கு செல்லாமல், பாரம்பரிய முறைப்படி மணமுறிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், நான்கு மாத கருவை கலைக்க ஒப்புக்கொண்டால் சுவிஸில், அந்த நபருக்கு மனைவியாக வாழ முடியும் எனவும், இல்லை என்றால் செர்பியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் எனவும் மிரட்டியுள்ளனர்.

இந்த நிலையிலேயே குறித்த செர்பிய இளம்பெண் சுவிஸ் பொலிசாரை நாடியுள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் குறித்த இளைஞருக்கு 9 மாதங்கள் வரை நிபந்தனையுடன் கூடிய சிறை தண்டனை வழங்கப்படலாம்.


இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை Rheintalமாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.