வீட்டிலிருந்து இரண்டு முறை ஓட்டம் பிடித்த மனைவி... துடித்து போன கணவன் எடுத்த முடிவு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, April 11, 2019

வீட்டிலிருந்து இரண்டு முறை ஓட்டம் பிடித்த மனைவி... துடித்து போன கணவன் எடுத்த முடிவு

ஜிம்பாப்வேயில் கணவரை விட்டு இரண்டு முறை காதலனுடன் ஓடி போன மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாட்சி (43) என்ற நபர் தனது மனைவி ஜியோனா மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஜியோனா தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். உடன் தனது குழந்தையையும் அழைத்து கொண்டு சென்றார்.

ஜியோனா இருக்கும் இடத்தை கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி அவரின் சகோதரியும், கணவர் மஹாட்சியும் கண்டுபிடித்தனர்.

இதன் பின்னர் ஜியோனாவின் சகோதரி அவர் இருக்கும் இடத்துக்கு சென்று ஜியோனாவை சமாதானப்படுத்தி அழைத்து வந்து கணவருடன் சேர்த்து வைத்தார்.

இந்நிலையில் நான்கு நாட்கள் கழித்து மார்ச் 20ஆம் திகதி மீண்டும் காதலனின் தூண்டுதலின் பேரில் தனது குழந்தையுடன் ஓட்டம் பிடித்துள்ளார் ஜியோனா.

இது குறித்து அவரின் கணவர் மஹாட்சி கூறுகையில், மீண்டும் வீட்டை விட்டு ஜியோனா ஓடியது வேதனையளிக்கிறது.

என்னை அவள் உண்மையாக நேசிக்காத பட்சத்தில் அவள் தனியாக சென்றிருக்க வேண்டுமே தவிர, குழந்தையை உடன் அழைத்து சென்றிருக்கக்கூடாது. என்னுடைய குழந்தை என் பராமரிப்பில் வளரவேண்டும், வேறு ஆண் இருக்கும் வீட்டில் வளரக்கூடாது.

இது தொடர்பாக நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளேன் என கூறியுள்ளார்