அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் முன்பு மர்ம நபர் தீ குளித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மதியம் வெள்ளை மாளிகையின் முன் ஒரு மனிதன், தன் மீது தானே தீ வைத்து கொண்டதை அமெரிக்காவின் இரகசிய சேவை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, வெள்ளை மாளிகையின் அருகே பாதசாரி போக்குவரத்தை மூடியுதோடு, அங்கு நின்றுகொண்டிருந்த மக்களையும் வேகமாக அப்புறப்படுத்தினர்.
வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்தின் போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் தான் இருந்தார், ஆனால் அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை என அமெரிக்காவின் இரகசிய சேவை கூறியுள்ளது.
ஒரு மின்னணு சக்கர நாற்காலி-வகை ஸ்கூட்டரை இயக்கி கொண்டு வந்த ஒரு ஆண், பென்சில்வேனியா அவென்யூ பகுதியில் திடீரென அவருடைய ஆடையில் தீயை வைத்துக்கொண்டதாக கூறியுள்ளனர்.
அவருக்கு அருகே மர்ம பொதிகை ஒன்றினை பொலிஸார் கண்டறிந்ததை அடுத்து, அவருக்கு முதலுதவி கொடுத்த பின்னர் கைது செய்தனர்.
மேலும் அந்த நபருக்கு அச்சுறுத்தும் வகையில் காயங்கள் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிபர் டிரம்ப் ரூஸ்வெல்ட் அறையில் தேசத்தின் 5 ஜி நெட்வொர்க்கைப் பற்றி பேசிய சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.