உடனடியாக காணியை விட்டு வெளியேறுங்கள் கரந்தாய் மக்களுக்கு நீதிமன்றம் உத்தரவு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 17, 2019

உடனடியாக காணியை விட்டு வெளியேறுங்கள் கரந்தாய் மக்களுக்கு நீதிமன்றம் உத்தரவு!

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரந்தாய் பகுதியில் காணி சீர்சிருத்த ஆணைக்குழுவால் 1976 ம் ஆண்டு மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தியிருந்த நிலையில் இன்று காலையிலிருந்து அக் காணிகளுக்கு உரிய மக்கள் தற்காலிக தரப்பாள் கொட்டில்கள் அமைத்தும் மரங்களுக்கு கீழேயும் தங்கி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கரந்தாயில் காணி சீர்திருத்த ஆணைக்குழு கைப்பற்றிய காணியில் ஏற்கனவே ஒருதடவை தாம் தற்துணிவின் அடிப்படையில் கொட்டில் அமைத்து வசிக்கமுற்பட்ட வேளை பொலீசார் கைது செய்து அதனை நீதிமன்றம் ஊடாக தடுத்ததாகவும் பின்னர் எந்த குற்றச்சாட்டுகளும் முன் வைக்காமல் விடுவிக்க பட்டதாகவும்,

அதனை தொடர்ந்து தாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்க்கு சென்று முறையிட்டதாகவும் அதன் பிரகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழு காணி சீர்திருத்த ஆணைக்குழுவை அழைத்து தமது காணிகளை விடுவிக்குமாறு உத்தரவிட்ட நிலையில் இதுவரை தமது காணிகள் வழங்கப்படாத நிலையிலேயே தாம் இன்று இப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளனர்

23 குடும்பங்கள் காணி அத்தாட்சிப்பத்திரம் வைத்துள்ளனர் 34 குடும்பங்களுக்கு அத்தாட்சி பத்திரம் இல்லாதவர்களும் உள்ளனர்.

இந்நிலையில் இன்று மதியம் காணி சீர்சிருத்த ஆணைக்க்குழுவால் கிளிநொச்சி நீதிமன்றில் முறைப்பாடு செய்து குறித்த மக்களை உடன் வெளியேற வேண்டுமெனவும் எதிர் வரும் 30 திகதி வரை காணிக்கு எவரும்கால் பதிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.