அப்பாவிற்காக எதைப் பற்றியும் யோசிக்காமல் உடலின் முக்கிய பகுதியை தானமாக கொடுத்த மகள்! நெகிழ்ச்சி புகைப்படம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, April 18, 2019

அப்பாவிற்காக எதைப் பற்றியும் யோசிக்காமல் உடலின் முக்கிய பகுதியை தானமாக கொடுத்த மகள்! நெகிழ்ச்சி புகைப்படம்

இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கும் புகைப்படம் தான் இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல தொழிலபதிபரும், RPG Group நிறுவனத்தின் தலைவருமான Harsh Goenka இன்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அறுவை சிகிச்சை செய்த நிலையில் தந்தை மற்றும் மகள் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

அதில் 19 வயதான Rakhi Dutta என்ற இளம் பெண் தன்னுடைய தந்தை கல்லீரல், நோயால் பாதிக்கப்பட்டதை உணர்ந்து, தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி நினைக்காமல், எந்த ஒரு பயமும் இல்லாமல் 65 சதவீதம் கல்லீரலை தானமாக கொடுத்துள்ளார்.

பொதுவாகவே பெண்களுக்கு என்றால் அப்பாவை மிகவும் பிடிக்கும், ஒரு சிலர் பெண்கள் ஒரு பயனற்றவர்கள் என்பதற்கு இந்த புகைப்படம் ஒன்றே பதில் கூறிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.இதைக் கண்ட இணையவாசிகள் Rakhi Dutta-வின் இந்த மிகப் பெரிய குணத்தைக் கண்டு பாரட்டி வருகின்றனர்.