கொழும்பில் நடந்த குண்டுவெடிப்பில் 48 வெளிநாட்டினர் உயிரிழந்துள்ள நிலையில், அதில் 8 பேர் பிரித்தானிய நாட்டை சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், பிரித்தானியாவை சேர்ந்த 55 வயதான Lorraine Campbell இறந்துபோனது தெரியவந்தாலும் உடலை அடையாளம் கண்டு உறுதிப்படுத்துவதற்காக இவரது கணவர் துபாயில் இருந்து கொழும்பு சென்றுள்ளார்.
தொழில் நிமித்தமாக ஐடி இயக்குநராக Lorraine Campbell கொழும்பில் உள்ள Cinnamon Grand Hotel இல் தங்கியிருந்துள்ளார்.
காலை உணவு சாப்பிடும்போது தற்கொலை குண்டுதாரி வரிசையில் நின்றுகொண்டிருக்கையில், அவருக்கு மிக அருகில் தான் Lorraine Campbell இருந்துள்ளார் என்பது சிசிடிவி காட்சியில் தெரியவந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் இவரும் இறந்துபோயுள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த 8வது நபர் இவர் ஆவார்.
தனது தாய் குறித்து மகன் மார்க் கூறியதாவது, எனது அம்மா மிகவும் தைரியாமான பெண்மணி. கடந்த ஆண்டு தான் துபாயை சேர்ந்த தனது நண்பரான நீல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
தொழில் ரீதியாக இருவருக்கும் ஒத்துப்போனது. எனது தந்தை பல வழிகளில் எனது தாய்க்கு உதவியாக இருந்தார். இறந்துபோன எனது தாயை எங்களுடன் எடுத்துவரவேண்டும் என கூறியுள்ளார்.