தூக்கில் சடலமாக தொங்கிய வைரமுத்து மனைவி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 12, 2019

தூக்கில் சடலமாக தொங்கிய வைரமுத்து மனைவி!

தமிழகத்தில் குழந்தை பெற்ற பெண் காவலர் மருத்துவ விடுப்பில் இருந்த நிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் வைரமுத்து (31). இவரது மனைவி அமுதவள்ளி (29). காவலராக பணியாற்றி வந்தார்.

இவர்களுக்கு கடந்த 2016 திருமணம் ஆன நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் அமுதவள்ளிக்கு தாய்வீட்டில் ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவத்துக்கு பின்னர் அமுதவள்ளி வயிற்றுவலி மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதன் காரணமாக அவர் மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார்.

இந்த சூழலில், அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.