வடக்கு தெற்கு பேதமின்றி அனைவரும் கொண்டாடும் கலாசார திருவிழா சித்திரை- பிரதமர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 13, 2019

வடக்கு தெற்கு பேதமின்றி அனைவரும் கொண்டாடும் கலாசார திருவிழா சித்திரை- பிரதமர்!

வடக்கு தெற்கு என்ற பேதமின்றி ஒட்டுமொத்த இலங்கையரும் ஒன்றிணைந்து கொண்டாடும் புத்தாண்டு எமது வாழ்வினதும், சமூகத்தினதும் மறுமலர்ச்சிக்கான தேசிய கலாசாரத் திருவிழாவென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள, தமிழ் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெளியிட்டுள்ள புத்தண்டு வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சிங்களத் தமிழ் புத்தாண்டு இன, மத பேதமின்றி இலங்கையர் அனைவரும் தமது வாழ்வினைப் புதுப்பித்துக் கொள்ளவும், அதனூடாக சமூகத்தைப் புதிய வழியில் பயணிக்கச் செய்வதற்கும் கிடைக்கும் அருமையான சந்தர்ப்பமென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்தாண்டை மையப்படுத்திய எண்ணக்கருக்கள், சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் இயற்கை மற்றும் மனிதனுக்கிடையிலான உறவினைப் புதுப்பித்துக்கொள்ள உதவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு, மனித சமூகத்தில் அன்பு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை போன்ற மானிடப் பெறுமானங்களைக் கட்டியெழுப்புவதனை நோக்கமாகக் கொண்டு உருவாகியுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டுச் சம்பிரதாயங்களின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துகொண்டு மானிடத்தை மேம்படுத்துவதற்கான, வாழ்வின் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கான அபிலாசையுடன் அவற்றைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.