தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 28, 2019

தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது!ஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் நடந்தேறிவரும், தீவிரவாத செயல்களில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த, தற்கொலை தாக்குதல் சூத்திரதாரிகளான, மொஹமட் சாஹித் அப்துல்ஹக், மொஹமட் ஷாஹிட் அப்துல்ஹக் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி இருவரையும் நாவலப்பிட்டியில் வைத்து, இன்று அதிகாலை 5.00 மணிளயவில் படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு மற்றும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என இராணுவத்தினரால் தேடப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் கொழும்பு தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுடன் இவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.