வடக்கில் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதுகாப்பு செயலாளரை சந்தித்து கலந்துரையாடவுள்ளது.
அதன்படி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பாதுகாப்பு படையின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
வடக்கில் பொதுமக்களின் காணிகளை பாதுகாப்பு படைவசமாக்க மீண்டும் காணி அளவீடுகள் இடம்பெறுகின்ற விடயம் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் மண்டைத்தீவில் நேற்று பொதுமக்களின் காணிகளை கடற்படையினர் சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்படவிருந்த நில அளவீடு பணிகள் மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்ததக்கது