யாழ் ஏ9 சாலையில் சற்று முன் நடந்த மிகப் பெரும் கொடூரம்!! ஆபத்தான நிலையில் ஒருவர் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 10, 2019

யாழ் ஏ9 சாலையில் சற்று முன் நடந்த மிகப் பெரும் கொடூரம்!! ஆபத்தான நிலையில் ஒருவர்

வீதியில் படுத்திருந்த ஒருவரின் கால்களின் மேலால் டிப்பர் வாகனம் ஏறி சென்றதால், படுத்திருந்தவரின் கால்கள் இரண்டும் சிதைவடைந்துள்ளன.

மாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் இன்று இரவு இந்த சம்பவம் நடந்தது.

வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்து கொண்டிருந்த ரிப்பர் ரக வாகனம், ஏ9 சாலையில் பனிக்கன்குளம் பகுதியில் வீதியோரமாக படுத்திருந்தவரின் காலின் மேலால் ஏறியது. இதில் படுத்திருந்தவரின் இரண்டுகால்களும் சிதைவடைந்தன.

அவருக்கு அவசர முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், நோயாளர் காவு வண்டியின் மூலம், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

35-40 வயது மதிக்கத்தக்க நபரே படுகாயமடைந்தார். எனினும், அவரது அடையாளம் உறுதிசெய்யப்படவில்லை.

அவர் மதுபோதையில் வீதியோரம் படுத்திருந்தார் என சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், வைத்திய பரிசோதனை அறிக்கையின் பின்னரே அதை உறுதி செய்யலாமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.