மதவாச்சியில் 52 வயது தாத்தாவினால் 14 வயது சிறுமி ஒருவர் பல முறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சிவில் பாதுகாப்பு படை வீரரான அவர் தனது உறவுககார தாத்தா என பாதிக்கப்பட்ட சிறுமி குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர் பல முறை தன்னை மிக கொடூரமாக துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபர் புல்எளிய மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கமைய சந்தேக நபரான தாத்தாவை பொலிஸார் கைது செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.