கர்நாடகா மாநிலத்தில் மது என்ற மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி வேண்டி சுமார் 50 ஆயிரம் பேர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது வைரலாகியுள்ளது.
ராய்ச்சூரில் உள்ள நவோதயா பொறியியல் கல்லூரியில் Civil Engineering பயின்று வந்துள்ளார். கல்லூரிக்கு சென்ற இவர் காணாமல் போன நிலையில் 2 நாட்கள் கழித்து காட்டுக்குள் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
கல்லூரியில் இருந்து சுமார் 6 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், மாணவி தற்கொலை செய்துகொண்டார் எனக்கூறி வழக்கை மூடி மறைக்க முயல்வதாக மனித உரிமை அமைப்பினர் மற்றும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால், மாணவி மதுவுக்கு நியாயம் வேண்டி கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளனர். தற்போது 50 ஆயிரம் பேர் இதில் இணைந்துள்ளார்கள். மேலும் தேர்தல் நேரம் என்பதாலும் இதனை அதிகாரிகள் ரகசியமாக கையாளுகிறார்கள் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.