பாராளுமன்றம் எதிர்வரும் 15 ஆம் திகதி கலைக்கப்படப் போவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
பாராளுமன்றம் மீண்டும் மே மாதம் 7 ஆம் திகதியே மீண்டும் கூடுகின்றது. ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் எதிர்வரும் 2020 மார்ச் மாதம் 03 ஆம் திகதியின் பின்னர்தான் யாப்பின்படி கிடைக்கப் பெறுகின்றது. பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு மூன்றில் இரண்டு அதிகாரம் தேவைப்படுகின்றது. பாராளுமன்றத்தில் அதற்கு வாய்ப்பில்லை.
எனவே, இந்த செய்தியில் எந்தவித உண்மைத் தன்மையும் கிடையாது. ஜனாதிபதிக்கு அதற்கு முன்னர் செய்வதாயின், ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை மாத்திரமே நடாத்த முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.