தமிழீழ கடற்பரப்பில் கைதான வெளிநாட்டவர்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 2, 2019

தமிழீழ கடற்பரப்பில் கைதான வெளிநாட்டவர்கள்!

சிறிலங்காவில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவுக்குச் செல்ல முற்பட்ட நான்கு நைஜீரியர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னாரில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் நேற்றுமுன்தினம் சந்தேகத்துக்குரிய படகு ஒன்றை சிறிலங்கா கடற்படையின் கரையோர ரோந்துப் படகு ஒன்று இடைமறித்து சோதனையிட்டது.

அந்தப் படகில் 4 நைஜீரியர்களும் மன்னாரைச் சேர்ந்த இரண்டு மீனவர்களும் இருந்தனர்.

26 வயதுக்கும், 42 வயதுக்கும் இடைப்பட்ட நைஜீரியர்கள் நால்வரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

இந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டு சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.