11 வயது சிறுவனைக் காணவில்லை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 12, 2019

11 வயது சிறுவனைக் காணவில்லை!

கடந்த 9 ஆம் திபதி முதல் 11 வளயதுடைய தனது மகனைக் காணவில்லையென அவரின் தந்தையார் பாதுக்கைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் தனது மகனை எவராவது அடையாளம் காண்டால் தனது (0712139862) தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காணாமல்போன சிறுவனின் தந்தையார் தெரிவிக்கையில்,

எனது மகனான 11 வயதுடைய முஹம்மட் அம்மார் கடந்த 9 ஆம் திகதி 11 மணியிலிருந்து காணாமல் போயுள்ளார்.

அவரை நான் அன்றையதினம் இரவு 10 மணிமுதல் தேடியும் மகன் கிடைக்காததால் நான் இரவு 10 மணியளவில் பாதுக்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.

எனது மகன் கலகெதர முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்றுவருகின்றார்.

இது வரையில் எனது மகன் கிடைக்காததால் அவர் தொடர்பான தகவல் அறிந்தால் அறியத்தருமாறு தந்தை கேட்டுக்கொள்கின்றார்.