அதிநவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் தனி மனிதன் தொடங்கி, உலக நாடுகள் வரை எவ்வளவு வளர்ச்சி பெற்று முன்னேறியிருந்தாலும், சில குறிப்பிட்ட விஷயங்களில், அதன் உண்மை தன்மையை அறிய முடியாமல் இன்னும் வெற்றிடமாகத்தான் நாம் உள்ளோம். அப்படி ஏராளமான மர்மங்களும், திகில் கிளப்பும் அமானுஷ்யங்கள் நிறைந்த இடமுமாகத்தான் ‘பெர்முடா முக்கோணம்’ இன்று வரை திகழ்கிறது.
வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில், ஒரு முக்கோணப் பகுதியாக காட்சி அளிக்கும் இந்த பகுதி, சாத்தானின் முக்கோணம் என்றும் பெரும்பாலானவர்களால் அழைக்கப்படுகிறது. இந்த பகுதியை கடந்துச் சென்ற ஏராளமான விமானங்களும், கப்பல்களும் மர்மான முறையில் காணாமல் போயிருக்கின்றன. அவை அனைத்தும் என்ன ஆனது என்ற மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க எந்த வான தூதனும் இதுவரை இறங்கி வரவில்லை.
காணாமல்போன பட்டியலில் அமெரிக்காவிற்கு சொந்தமான விமானங்களும், கப்பல்களும் ஏராளம். அதி நவீனத்தையே பெரிதும் நம்பியிருக்கும் அமெரிக்கா, இந்த கடல் பகுதியில் பல மர்மங்கள் மறைந்திருப்பதை இன்று வரை மறுத்துதான் வருகிறது. ஆனாலும், காணாமல்போகும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் குறித்த செய்திகள் இன்னும் தொடரத்தான் செய்கிறது. இதனிடையே வேற்று கிரக உயிரினங்கள் மற்றும் கண்களுக்கு புலப்படாத ஜீவராசிகள் இப்பகுதியில் வசிப்பதாக வெகு ஜன மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இங்கு நிகழக்கூடிய எந்த மாயங்களையும் இன்னும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
மேலும், இப்பகுதியில் மிகப்பெரிய பிரமிடு மறைந்திருப்பதாகவும் எல்லோரும் நம்புகிறார்கள். அதனால், இப்பகுதியில் மேலே பறக்கக்கூடிய எல்லாவற்றையும் கீழே இழுத்துக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது.
கடல் வழியாக உலகை சுற்றி வலம் வருகையில், பெர்முடா முக்கோணத்தின் அருகே கடந்துச் செல்லும்போது திசைக் காட்டும் கருவிகள் தாறுமாறாக சுழன்றதாகவும், பயமுறுத்தும் வகையில் விநோதமான வெளிச்சங்கள் தோன்றியதாகவும் அதனால், வேறு வழியாக கப்பலை திரும்பி விட்டதாகவும் அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் தெரிவித்திருக்கிறார். மேலும், ‘நாட்டியமாடும் பயமுறுத்தும் வெளிச்சங்கள்’ உள்ள பகுதி என்றும், ‘தீப்பிளம்பு கொண்ட வானம், பித்துபிடிக்கும் காம்பஸ்கள்’ எனவும் இப்பகுதியை அவர் 1492-ம் ஆண்டு வர்ணித்துள்ளார்.
bermudatriangle2
இந்த கடல் பகுதியில் கடந்த 500 வருடங்களாக ஏராளமான கப்பல் மற்றும் விமானங்கள் மாயமானாலும், அதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று ஒரு பக்கம் கூறப்பட்டு வருகிறது, மறுபக்கம் அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டும் வருகிறது.
1909-ம் ஆண்டு சொகுசு படகு மாயமாகி உள்ளது.
1945-ம் ஆண்டு டிசம்பரில் ஃப்ளோரிடாவில் இருந்து கிளம்பிய அமெரிக்கா விமானம், 120 கி.மீ தூரம் வரை சென்று, பிறகு மாயமானது.
1948- ம் ஆண்டு 27 பயணிகளுடன் ஒரு கப்பல் மாயமாகி உள்ளது.
1951-ம் ஆண்டு 53 பயணிகளை அழைத்துச் சென்ற கப்பல் மாயமானது.
இப்படி தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக மாயமானதால், எல்லோருடைய பாதுகாப்பையும் கருதி, இப்பகுதியில் கப்பல் மற்றும் விமானம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆதி காலம் தொட்டு பாதுகாத்து போற்றப்பட்டு வந்த இந்து மதங்களின் தர்ம சாஸ்திரமாக கருதப்படும் நான்கு வேதங்களில் ஒன்றான ரிக் வேதம் மற்றும் அதர்வண வேதம் ஆகிய இரண்டு வேதங்களில் ‘பெர்முடா முக்கோணம்’ பகுதியில் நடைபெறும் நிகழ்வை போன்றே, பல அரிய தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.
ராமாயணம்:
* ‘பெர்முடா முக்கோணம்’ இடத்தை பற்றிய செய்திகள் போன்றே, ராமாயணத்திலும் சொல்லப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் கடல் பகுதியில், ‘சிம்ஹிகா’ என்ற அசுர பலம் பொருந்தியவள் கடலில் இருந்ததாகவும், அவளின் மேல் பகுதியில் பறக்ககூடிய எந்த பொருளையும் தன் வசம் ஈர்க்ககூடிய சக்தி படைத்தவளாகவும் திகழ்ந்ததாக ராமாயணத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.
ரிக் வேதம்:
* 23 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் மிக தெளிவாக ‘பெர்முடா முக்கோணம்’ போன்ற ஒரு பகுதியைப் பற்றி விரிவாக சொல்லப்பட்டுள்ளது.
* 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ‘பிரமாண்ட புராணத்தில்’ இதுபோன்ற பகுதியை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
* பூமியில் இருந்து உருவான கிரகம்தான் செவ்வாய். அதனால்தான், பூமியின் மகன் ( son of bhumi) என்று சொல்கிறோம். அல்லது குஜா (kuja) என்றும் சொல்லப்படுகிறது. ‘கு’ என்றால் பூமி, ‘ஜா’ என்றால் பிறந்தவன் என்பது அதன் பொருள். இது சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் வார்த்தை.
* ரிக் வேதத்தில் இடம் பெற்றுள்ள ‘அஸ்ய வாம்ஸய என்னும் சூக்தத்தில் பூமியில் இருந்துதான் செவ்வாய் கிரகம் பிறந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி பிறந்த செவ்வாய் கிரகம், பூமியை விட்டு தனியாக பிரிந்து சென்றபோது, முக்கோண வடிவத்தில் பூமி மீது காயம் ஏற்பட்டுள்ளது. காயம்பட்ட பூமியில், தேவர்களின் மருத்துவர்களாகிய அஸ்வினி குமாரர்கள் இரும்பை காய்த்து ஊற்றி, அவ்விடத்தை சரி செய்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதனால், பூமி சற்று சாய்ந்து சுமார் 23 1/2 டிகிரி அளவுக்கு சாய்வான நிலையை அடைந்துள்ளது.
* பூமி சாய்வாக உள்ள பகுதியில்தான், இயற்கையாக இரும்பினால் உருவாக்கப்பட்ட காந்த ஈர்ப்பு சக்தியானது, எந்த பொருளையும் தன் வசம் ஈர்த்துக்கொள்கிறது. அத்துடன் அதிகளவு பனிமூட்டமும், உச்சக்கட்ட குளிர்ச்சியும் இப்பகுதியில் நிலவுகிறது.
* அதேபோல்தான் பூமியிலிருந்து, நிலவும் உருவாகி பிரிந்து சென்றுள்ளது.
geuu_02_img0437
அதர்வண வேதம்:
* அதர்வண வேதத்தில் பல அறிய கற்கள் மற்றும் பவளங்கள் குறித்து சொல்லப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக ‘தர்பை கல்’ என்னும் பகுதி, பெர்முடா முக்கோணத்தில் நிகழும் மாயையை ஒட்டியே அமைந்துள்ளன.
* ‘தர்பை கல்’ என்பது, உயர் அடர்த்தி கொண்ட நியூட்ரான் நட்சத்திரமாகும். இது மிக குறுகிய வடிவம் கொண்டது. இது ஒரு சக்தி வாய்ந்த மற்றும் ஆபத்தான கல்லாகும்.
* இந்த கல் உள்ள பகுதி, உயர்ந்த ஈர்ப்பு விசைகொண்ட ஒரு நிலமாக பார்க்கப்படுகிறது. இதற்கு ஈர்ப்பு விசை சக்தி அதிக அளவில் இருப்பதால், தர்பை கல்லின் மேல் பகுதியில் செல்லும் எந்த பொருளையும் கீழ் நோக்கி ஈர்க்ககூடிய அதிக சக்தியை பெற்றுள்ளது.
* இந்த ‘தர்பை கல்’லிருந்து வெளிப்படும் எந்திர காந்த ஈர்ப்பு அலைக்கற்றையானது, ஒரு கம்பியில்லாத கருவியிலிருந்து, இன்னொரு கருவிக்கு செல்லும்போது, எதிர்படும் அந்த அமைப்பு முழுவதுமாய் தோற்றுப்போய் பழுதடைந்து விடும்.
* 19-வது காண்டம், 4-வது மந்திரமான 28 -வது சூக்தத்தில் என்ன சொல்லப்படுகிறது என்றால், ‘ஏ தர்பை கல்லே! எழக்கூடிய எதிரிகளை தாங்கள் ஈர்த்து, எங்களை காப்பாற்றுங்கள்’ என கூறப்பட்டுள்ளது. அதனால், இந்த கல்லில் இருந்து வெளிப்படும் சக்தியானது, புதிதாக உருவாகக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளையும், அடிப்படையிலேயே அழித்து விடும் ஆற்றல் படைத்து விடுகிறது.
* இந்த தர்பை கல்லிற்கு, தண்ணீரில் இருக்கும்போது, அதிக ஈர்ப்பு விசை கிடைக்கிறது.
* 7-ம் மந்திரத்தில், சொல்லப்படுவது என்ன என்றால், தயிர் எப்படி உறைகிறதோ அதுபோல், தர்பை கல்லானது, எதிர்படும் அனைத்தையும் உறைய செய்து, அதன் உண்மை தன்மையை அழித்து எரித்து விடும் ஆற்றல் உடையதாக சொல்லப்படுகிறது.
* நவீன அறிவியல்படி, அந்த கல், சிவப்பு வண்ணத்தில் இருப்பதாகவும், செவ்வாய் கிரகத்திற்கு இணையாக திகழ்வதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் மீத்தேன் அதிகமாக இருப்பதாலும், மீத்தேன் குமுழ்கள் அதிகமாக சுரப்பதாலும்தான் கப்பல் மற்றும் விமானத்தை தன் பக்கம் ஈர்த்துகொள்கிறது.
இவை எல்லாம் அதர்வண வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ‘தர்பை கல்’ செயல்பாடுகளாக இருப்பது போலவே, பெர்முடா முக்கோணத்திலும் இருக்கிறது.
நவீன அறிவியல்படி செவ்வாய் கிரகம் முக்கோண வடிவத்தில் இருப்பதாகவும், அங்கு மீத்தேன் மற்றும் மீத்தேன் குமிழிகள் அதிகமாக சுரப்பதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளன. அத்துடன், அங்கு பல நதிகள் இருந்து வற்றியதற்கான சுவடுகள் காணப்படுவதாகவும் நாசா கண்டறிந்துள்ளது.
தற்போதையை நவீன உலகில், ‘பெர்முடா முக்கோணம்’ பற்றிய தகவல்களை நாசா இப்போது ஒவ்வொன்றாக கண்டறிந்து வந்தாலும், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்துக்களின் முந்தைய வேத காலம் என்று சொல்லப்படும் ரிக் வேதத்திலும், இறுதியான வேதமான அதர்வண வேதத்திலும் மற்றும் புராணங்களிலும் மிக தெளிவாக நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பது பிரமிப்பாகதான் இருக்கிறது.
மூத்தோர் சொல் அமிர்தம் என்று அவ்வையார் சொன்னதுபோல், நமது முன்னோர்கள் சொன்னது அனைத்தும் உண்மையே என்று இதுபோன்ற விஞ்ஞான முடிவுகள் இந்து மதத்தின் சிறப்புகளை மேலும் தெளிவுப்படுத்துகிறது.
-ரா.வளன்